ADDED : செப் 29, 2013 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வத்தைப் பறைசாற்றிக் கொள்வதில் பெருமையில்லை. தன்னடக்கத்தையும் புகழ வேண்டும் என விரும்புவது கூடாது. இவை இரண்டும் அகந்தையின் வெளிப்பாடே.
* உன்னைப் புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
* அஞ்சாமையில் சிங்கத்தைப் போல இரு. சகிப்புத்தன்மையில் பசுவைப் போல இரு.
* நல்லவன் வருந்துவதும், தீயவன் வாழ்வதும் உலகில் நடக்கத் தான் செய்கிறது. அதற்காக கடவுளைத் தீயவன் என்று எண்ணுவது கூடாது.
* உன்னை நீயே இரக்கமின்றி ஆராய்ந்து பார். அப்போது நீ பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வாய்.
* பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டு விடு. கண்களைத் திறந்து பார். உலகம் எத்தகையது, கடவுள் எப்படிப்பட்டவர் என்ற உண்மை புரியும்.
- அரவிந்தர்